Tuesday, November 17
Shadow

தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!

தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!

பேட்மிண்டன் வீரரின் போராட்டம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை மையமாகக் கொண்டு உருவாகும் ‘SMASH’ – டெல்லியில் தீவிரமாக நடைபெறும் படப்பிடிப்பு!

விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தோல்வியால் துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒரு பேட்மிண்டன் வீரரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது புதிய திரைப்படமான ‘SMASH’.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான திரைத்துறை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் உருவாகி வரும் இப்படம், இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பாக உருவாகி வருகிறது.

தமிழில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ‘Demonte Colony 2’ திரைப்படத்தை தயாரித்ததுடன், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வரும் White Nights Entertainment, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த Smena Film Company LLC நிறுவனத்துடன் இணைந்து ‘SMASH’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

தோல்வியிலிருந்து வெற்றிக்கான பயணம்!

ஒரு விளையாட்டு வீரரின் வெற்றி என்பது பதக்கங்களாலும் சாதனைகளாலும் மட்டுமே அளவிடப்படுவதில்லை. அதன் பின்னால் இருக்கும் தோல்விகள், மன உளைச்சல்கள், போராட்டங்கள், விடாமுயற்சி மற்றும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் மனநிலை ஆகியவையே அந்த வெற்றிக்கான அடித்தளமாக அமைகின்றன.

அத்தகைய ஒரு வீரரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டே ‘SMASH’ திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்மிண்டன் விளையாட்டில் எதிர்பாராத தோல்வியை சந்திக்கும் கதாநாயகன், அந்தத் தோல்வியிலிருந்து தன்னை மீட்டெடுத்து, தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் ஆயுதமாகக் கொண்டு மீண்டும் களத்திற்குத் திரும்புகிறார். வெற்றியை அடைவதற்காக அவர் எதிர்கொள்ளும் சவால்கள், உணர்வுப் போராட்டங்கள் மற்றும் தடைகளை கடந்து செல்லும் பயணமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

விளையாட்டின் பரபரப்பு மட்டுமின்றி, ஒரு வீரரின் மனதில் நடைபெறும் போராட்டங்களையும் உணர்வுகளையும் அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்தியா – ரஷ்யா இணையும் திரைப்பயணம்!

‘SMASH’ திரைப்படத்தை இந்தியாவைச் சேர்ந்த White Nights Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் திரு. விஜய் சுப்ரமணியன் மற்றும் திரு. காசி விஸ்வநாதன், ரஷ்யாவைச் சேர்ந்த Smena Film Company LLC நிறுவனத்தின் தயாரிப்பாளர் எகத்தெரினா கோலுபேவா (Ekaterina Golubeva) ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் படைப்பாற்றலை ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டுத் தயாரிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலை மற்றும் கலாச்சார உறவுகளை சினிமா வாயிலாக மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!

‘SMASH’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விளையாட்டு அரங்குகள் மற்றும் கதைக்களத்திற்குத் தேவையான பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா புதுடெல்லியில் உள்ள ரஷ்யன் ஹவுஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரஷ்ய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்வெட்லானா சுப்ஷேவா (Svetlana Chupsheva) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘SMASH’ படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியா – ரஷ்யா இணைந்து உருவாக்கும் திரைப்படமாக மட்டுமின்றி, விளையாட்டு, மனித உணர்வுகள், விடாமுயற்சி மற்றும் வெற்றிக்கான போராட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் படைப்பாக ‘SMASH’ உருவாகி வருகிறது.

திரைப்படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வி என்பது முடிவல்ல… மீண்டும் எழுவதற்கான தொடக்கம்!
அந்த எண்ணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘SMASH’, இந்தியா – ரஷ்யா திரைத்துறை கூட்டணியில் உருவாகும் குறிப்பிடத்தக்க திரைப்படமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது.

 

‘SMASH’ – A Powerful Story of a Badminton Player’s Journey from Defeat to Victory!

New Indo-Russian Film ‘SMASH’ Takes Shape as a Joint Production Between India and Russia

Films based on sports have always held a special place among audiences, particularly when they explore the determination and emotional struggles behind an athlete’s success. Adding to this genre is ‘SMASH’, an upcoming Indo-Russian film that revolves around a badminton player’s inspiring journey from defeat to victory.

The film is being produced as a joint India-Russia production, bringing together creative forces from both countries. The story focuses on an athlete who, after facing a major setback, refuses to give up and begins the challenging journey of rebuilding his confidence and returning to the path of success through perseverance, determination and hard work.

Produced by White Nights Entertainment, the company behind the Tamil hit Demonte Colony 2, in association with Russia-based Smena Film Company LLC, ‘SMASH’ aims to present an engaging blend of sports, emotions, struggle and the never-give-up spirit.

White Nights Entertainment, which has been producing several films and is also involved in the distribution of Indian films across India and Russia, is jointly producing ‘SMASH’ with Smena Film Company LLC.

The film is being produced by Mr. Vijay Subramanian and Mr. Kasi Viswanathan from White Nights Entertainment, along with Russian producer Ekaterina Golubeva of Smena Film Company LLC.

A Story of Rising Again After Defeat

At the heart of ‘SMASH’ is the belief that an athlete’s journey cannot be measured merely by victories, medals or achievements. Behind every success lies a series of challenges, disappointments, emotional struggles and relentless efforts to rise again.

The film follows a badminton player who encounters defeat and setbacks but chooses to fight back instead of giving up. His journey of regaining his confidence, overcoming obstacles and working his way back towards success forms the core of the narrative.

Along with the excitement and intensity of the sport, the film is also expected to explore the emotional and personal battles faced by an athlete both on and off the court.

Filming Progresses in Delhi

The shooting of ‘SMASH’ is currently progressing at a brisk pace in Delhi, with the team filming across various locations suited to the story and its sporting backdrop.

Meanwhile, the teaser launch event of the film was held at Russian House in New Delhi in a special gathering.

Svetlana Chupsheva, Russian Minister of Culture, attended the event as the special guest and conveyed her wishes to the team behind ‘SMASH’.

The film marks an important collaboration between the Indian and Russian film industries and is expected to further strengthen the artistic and cultural ties between the two countries through cinema.

With sports, human emotions, perseverance and the determination to overcome failure forming the heart of the story, ‘SMASH’ is shaping up as an interesting addition to the sports-drama genre.

Official announcements regarding the film’s director, cast and release date are expected to be made soon.

‘SMASH’ is set to bring together the cinematic energies of India and Russia while telling an inspiring story about resilience, determination and the pursuit of victory.