தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!
தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!
பேட்மிண்டன் வீரரின் போராட்டம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை மையமாகக் கொண்டு உருவாகும் ‘SMASH’ – டெல்லியில் தீவிரமாக நடைபெறும் படப்பிடிப்பு!
விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தோல்வியால் துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒரு பேட்மிண்டன் வீரரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது புதிய திரைப்படமான ‘SMASH’.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான திரைத்துறை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் உருவாகி வரும் இப்படம், இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பாக உருவாகி வருகிறது...
