
சென்னையில் 4 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் கே.ஆர்.எம். பள்ளி குழுமங்கள் சார்பில் செயல்படும் கே.ஆர்.எம். சிறப்பு பள்ளி சார்பில் பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை கண்ணகி சிலையில் தொடங்கி விவேகானந்தர் இல்லம்வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரம் சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு கொண்டனர்.
நடிகர் எஸ்வி சேகர், வசீகரன் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி பி.சந்தோஷம், திலகவதி ஐ.பி.எஸ்., டிராபிக் ராமசாமி, வெள்ளையன், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, மனுஷபுத்திரன், ஜோதிபாசு, எக்ஸ்னோரா நிர்மல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பான விழிப்புணர்வு ஓட்டத்தில் 23 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த பிள்ளைகளை பங்கு பெறச்செய்யும் பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திய கே.ஆர்.எம்.சிறப்பு பள்ளியின் இயக்குனர் நர்த்தனா முடிவில் நன்றி கூறினார்.
