Friday, October 16
Shadow

15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ… உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்!

15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ… உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்!

சென்னை: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகம் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை ரசிகர்களின் கொண்டாட்டக் களமாக மாறியது. ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து, இசையின் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

மாலை நேரம் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் இருந்தது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவின் நேரடி இசை நிகழ்ச்சியும், டிஜே தீபிகாவின் துள்ளலான இசையும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. அதன்பின் மேடைக்கு வந்த அனிருத்தை ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.

அவரது புதிய சுயாதீன பாடலான ‘அரவிந்த்’ மற்றும் பல சூப்பர் ஹிட் பாடல்களை நேரடியாக பாடிய அனிருத், ரசிகர்களை முழுமையாக ஈர்த்தார். அரங்கம் முழுவதும் பாடல்களுடன் இணைந்து பாடிய ரசிகர்களின் குரல், அந்த நிகழ்வை ஒரு பெரிய இசைத் திருவிழாவாக மாற்றியது.

நிகழ்வில் பேசிய அனிருத், எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் தனக்குள்ள நீண்டகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உலகம் முழுவதும் கவனம் பெற்ற ‘Why This Kolaveri Di’ பாடலின் வெற்றிக்குப் பிறகு இதே இடத்திற்கு வந்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போது தனது சுயாதீன இசை நிறுவனமான ‘அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்’ மூலம் வெளியான முதல் பாடலான ‘அரவிந்த்’ வெற்றியைக் கொண்டாட மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியான தருணம் எனக் கூறினார்.

‘அரவிந்த்’ பாடலின் பின்னணிக் கதையையும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், தனது நெருங்கிய நண்பருக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் வெளிப்பாடாகவே இந்தப் பாடல் உருவானதாக தெரிவித்தார். தனது இசைப் பயணத்தில் மிகவும் நெருக்கமான படைப்புகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், சென்னை ரசிகர்களின் அன்பும் உற்சாகமும் தனித்துவமானது என்று அனிருத் தெரிவித்தபோது, ரசிகர்கள் நீண்ட நேரம் கைத்தட்டி வரவேற்றனர். சென்னை எப்போதும் தனது மனதுக்கு நெருக்கமான நகரம் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக ரசிகர்களின் நேரடி பங்கேற்பு அமைந்தது. பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ரசிகர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டதுடன், ‘அனிருத் வால் ஆஃப் ஃபேம்’ பகுதியில் தங்களது வாழ்த்துகள் மற்றும் நினைவுகளை பதிவு செய்தனர்.

இந்த நிகழ்வு அனிருத் ரசிகர்களின் பேராதரவை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இசை எப்படி ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. உலக இசை தினத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், இசை, நட்பு, நினைவுகள் மற்றும் கலைஞர்–ரசிகர் உறவின் அழகை கொண்டாடிய மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

Over 15,000 Fans Turn Express Avenue into a Musical Celebration as Anirudh Marks World Music Day

Chennai: Express Avenue in Chennai transformed into a vibrant hub of music and celebration on World Music Day as more than 15,000 fans gathered for Rockstar Anirudh Ravichander’s special event, ‘Vibe With Aravind.’

The excitement began early in the evening, with fans filling the venue in anticipation of seeing one of India’s most celebrated music composers perform live. The atmosphere was further energized by performances from the Mottamaadi Music band and DJ Deepika, who kept the crowd entertained with an electrifying musical set.

The energy reached a new high when Anirudh took the stage to thunderous applause. Performing his latest independent track ‘Aravind’ along with several of his chart-topping hits, the composer-singer had thousands of fans singing along, turning the venue into a massive musical festival.

Speaking at the event, Anirudh reflected on his long association with Express Avenue. He recalled visiting the same venue nearly fifteen years ago following the global success of ‘Why This Kolaveri Di.’ Returning to the venue now to celebrate ‘Aravind,’ the first release from his independent music label Albuquerque Records, made the occasion particularly special, he said.

Sharing the story behind the song, Anirudh revealed that ‘Aravind’ was inspired by a promise he had made to a close friend several years ago. He described the track as one of the most personal projects of his career and an important milestone in his musical journey.

Although he has performed in cities across the world, Anirudh said Chennai continues to hold a special place in his heart. He praised the city’s fans for their unmatched energy, enthusiasm, and unwavering support, drawing loud cheers from the audience.

One of the highlights of the evening was the active participation of fans. Attendees engaged in various interactive activities and entertainment segments, while many left heartfelt messages and memories on the Anirudh Wall of Fame.

Beyond celebrating music, the event showcased the strong bond between Anirudh and his fans. It also demonstrated music’s unique ability to bring thousands of people together in a shared experience of joy and connection.

As the evening came to a close, one thing became clear: ‘Vibe With Aravind’ was more than just a music event. It was a celebration of music, friendship, memories, and the special relationship between an artist and his audience.