வளசரவாக்கம் வீட்டில் இருந்த தன்னை 2 பேர் தாக்கியதாக காவல் நிலையத்தில் ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார். சினிமா பைனான்சியர் சுப்ரமணி மற்றும் அவரது உறவினர் கோபி மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் சிலரும் இதில் சிக்கினர். பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு ஆதரவாக முகநூலில் அடிக்கடி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினார். ஐதராபாத்தில் இருந்து வெளியேறி தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது.

Related