
மாண்டாடி விவகாரம்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சுஹாஸ் உருக்கமான பதிவு
சென்னை: மாண்டாடி தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நீடித்து வரும் நிலையில், நடிகர் சுஹாஸ் தனது ரசிகர்கள் மற்றும் தன்னை தொடர்ந்து ஆதரித்து வரும் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தை நினைவுகூர்ந்துள்ள சுஹாஸ், யூடியூபில் குறும்படங்கள் உருவாக்கிய காலம் முதல் கதாபாத்திர நடிகராகவும், பின்னர் முன்னணி நடிகராகவும் வளர்ந்த தனது பயணத்தில் ரசிகர்களின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளார்.
“என் மீது நீங்கள் வைத்த அன்பு, ஊக்கம் மற்றும் நம்பிக்கையே இன்று நான் இருக்கும் நிலைக்கு காரணம். அந்த அங்கீகாரம் எனக்கு பல்வேறு வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்தது. அதில் மாண்டாடியில் இடம்பெற்ற வாய்ப்பும் ஒன்று” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது பணியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவித வேறுபாடும் இன்றி ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொண்டதாகவும், தனது பயணமே அதற்கு சாட்சியாக இருப்பதாகவும் சுஹாஸ் தெரிவித்துள்ளார்.
தன்னை ஆரம்ப காலத்திலிருந்து ஆதரித்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும், தன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்ற கடினமாக உழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள தனது பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள சுஹாஸ், மாண்டாடி கதாபாத்திரத்துக்கு வழங்கப்பட்ட அன்புக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.

Suhas Thanks Telugu Audience Amid Ongoing Discussion Around ‘Mandaadi’
Chennai: Amid the ongoing discussion surrounding Mandaadi, actor Suhas has issued a heartfelt note expressing his gratitude to the Telugu audience and everyone who has supported him throughout his career.
Recalling his journey from making short films on YouTube to becoming a character actor and eventually a lead actor, Suhas said that the love, encouragement and belief of his audience have played a significant role in his growth.
“Whatever I am today is because of your love, encouragement and belief in me,” Suhas said in his note. He added that the recognition he received from the audience opened several doors for him, including the opportunity to be part of Mandaadi.
The actor also said that audiences embraced him for his work without any conditions, adding that his journey itself stands as a testament to their continued support.
Suhas further assured his supporters that he would always remember those who gave him his beginning and encouraged him to reach this stage. He said he would continue to work hard and honour their trust through his performances.
Expressing his heartfelt thanks to viewers across the states, the actor also acknowledged the love shown towards Mandaadi and his character in the film.
