Sunday, December 8
Shadow

தேசிய விருது இயக்குனருடன் இணையபோகும் ரஜினிகாந்தின்- அதிர வைக்கும் கதைக்களம்

ரஜினிகாந்த் காலா படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டார். படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இதை தொடர்ந்து 2.0 வர, அதன் பிறகு ரஜினி அரசியலில் இறங்கிவிடுவாரா? அல்லது ஒரு சில படங்களில் நடிப்பாரா? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் அட்லியின் கதை பிடித்து அதில் நடிப்பார் என்று ஒரு சில செய்திகள் கசிந்தது அனால் தற்போது அதிரடியாக ஒரு செய்தி தேசியவிருது இயக்குனருடன் இணையபோகிறார் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்நிலையில் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்ற கதையை உருவாக்கியுள்ளார், விவசாயிகளின் பிரச்சனையை இது பேசுமாம்.

இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் தான் தற்போது சரியாக இருக்கும், அப்போது தான் இந்த பிரச்சனை உலகம் முழுவதும் தெரியும் என்று மணிகண்டன் விருப்பப்பட, ரஜினி சம்மதிப்பாரா? பார்ப்போம். அனால் இந்த முயற்சியில் முழு மூச்சாக தனுஷ் ஈடுபட்டுள்ளார் ஆகவே நடிக்க அதிக வாய்ப்புகள் என்று ரஜினி வட்டாரத்தில் பேசபடுகிறது