சூர்யா நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்கள் தயாரிப்பில் உள்ள நிலையில் மற்றொரு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா, அடுத்தடுத்து நான்கு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார். அடுத்த திரைப்படத்திலும் இந்தக் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டபோது நிலையில், தற்போது சிவா – சூர்யா கூட்டணி உருவாகியுள்ளது. சிறுத்தை படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சிவா உடன் இணைந்து இரு படங்களில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.