Sunday, November 3
Shadow

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘என்.ஜி.கே.’ செகண்ட் லுக் ‘என்.ஜி.கே.’ விளக்கம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை சூர்யாவுக்குப் பிறந்த நாள். அதை முன்னிட்டு, செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ‘என்.ஜி.கே.’ என்றால் என்ன என்பதற்கான விளக்கமும் அதில் தரப்பட்டுள்ளது. ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம் தான் ‘என்.ஜி.கே.’. இதை நாம் கடந்த மார்ச் மாதமே கூறியிருந்தோம்.

சூர்யாவின் ‘என்.ஜி.கே’வுக்கு என்ன விளக்கம்

சூர்யாவுக்குத் தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால், அங்கும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதற்குப் பதிலாக ‘நந்த கோபாலன் கிருஷ்ணன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் சூர்யாவின் பெயர் இது.

‘என்.ஜி.கே.’வின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா, அதேசமயத்தில் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.