Monday, December 9
Shadow

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைந்த தின பதிவு

இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என். டி. ராமராவ், கமல்ஹாசன், விஸ்ணுவர்தன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார். 2013 ஜூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

சாந்தி நிலையம், ரிக்ஷாக்காரன், சக்தி லீலை, இதய வீணை, அம்மன் அருள், மறு பார்வை, பூக்காரி, எங்கள் தங்க ராஜா, பாச தீபம், ராஜ சாங்கம், உலகம் சுற்றும் வாலிபன், டாக்டரம்மா, என் மகன், அன்பே ஆருயிரே, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், டாக்டர் சிவா, அவன் தான் மனிதன், மன்னவன் வந்தானடி, நேற்று இன்று நாளை, எல்லோரம் நல்லவரே, உத்தமன், சத்யம், அவன் ஒரு சாத்தான், அல்லி தர்பார், நீயா?, வெள்ளி ரதம், குப்பத்து ராஜா, நட்சத்திரம், நெஞ்சங்கள், புது வசந்தம், சேரன் பாண்டியன், அதிகாரி, அமரன், காவிய தலைவன், செந்தமிழ் பாட்டு, முதல் குரல், சக்திவேல், பிரியங்கா, நிலா, லக்கி மேன், தம்பி துறை, நாம் இருவர் நமக்கு இருவர், சூரிய பாவை, சமுத்திரம்,என் உள்ளம் உன்னை தேடுதே