
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கில் யாத்ரா என்ற பெயரில் தயாராகிறது. ஒய்எஸ்ஆர் வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டைரக்டர் மகி வி.ராகவ் அளித்த ஒரு பேட்டியில், யாத்ரா படத்தில் ஒய்எஸ்ஆரின் மகனான ஒய்.எஸ்.ஜெகன் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அதனால் அந்த வேடத்தில் சூர்யா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்திருக்கிறோம்.
அதுபற்றி இன்னும் சூர்யாவை அணுகி பேசவில்லை. விரைவில் அதுகுறித்த அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்
