Wednesday, February 12
Shadow

நடிப்பதை நிருத்த போகும் சமந்தா ஏன் தெரியுமா?

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னும் சமந்தா இரு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் அவர் நடித்துள்ள சில படங்கள் வெளிவர உள்ளன. அவர் நடித்துள்ள ‘சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை’ ஆகிய தமிழ்ப் படங்களும், ‘மகாநதி’ என்ற தெலுங்குப் படமும் விரைவில் வெளியாக உள்ளன. இவற்றைத் தவிர்த்து ‘யு டர்ன்’ என்ற ஒரு கன்னடப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

வேறு எந்தப் புதிய படங்களிலும் நடிக்க சமந்தா சம்மதிக்கவில்லையாம். அவருக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். அதனால், புதிய படங்களை ஏற்க மறுப்பதாகவும் தகவல். தாய்மை அடைந்த பின் நடிப்பதை உடனடியாக நிறுத்திவிடவும் சமந்தா முடிவெடுத்துவிட்டாராம். இதுதான் தற்போது டோலிவுட்டில் பரபரப்பான செய்தி.