
சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் அதோடு மிக பெரிய ரசிக்கவே பட்டாளத்தையும் உண்டுபண்ணியுள்ளார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ரிலீஸ் ஆனா தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதோடு வசூலிலும் சாதனை படைத்துள்ளது.இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று சென்னையில பிரபல ஓட்டலில் நடைபெற்றது அப்போது பத்திரிக்கையாளர்கள் பேசிய சூரிய இன்றைய அரசியல் சூழ்நிலையை பற்றி பேசினார்.
அப்போது, நடிகர் சூர்யாவிடம் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லையென்று வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தவர், அரசியலில் ஈடுபடும் நடிகர்களில் யாரை ஆதரிப்பேன் என்று தற்போதைக்கு சொல்ல முடியாது, என்றும் கூறினார்.
