
திரைக்கதை எழுத்தாளர்களுக்கான புதிய பயிற்சித் தளம்: சென்னையில் ஸ்வேன் அகாடமி தொடக்கம்
லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் ஸ்வேன் அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டம்
சென்னை: தென்னிந்திய திரையுலகில் திரைக்கதை எழுத்தாளர்களுக்கான முறையான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN), ஐபி கிளைம்ப் நிறுவனத்துடன் இணைந்து ஸ்வேன் அகாடமியை தொடங்கியுள்ளது.
இதையொட்டி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு எழுத்தாளர்கள் மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரைக்கதை எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முன்னணி படைப்பாளிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஸ்வேன் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சேரன், ஸ்வேன் அகாடமியின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். திரைக்கதை எழுதுவதற்கான படைப்பாற்றலுடன், எழுத்தாளர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாப்பதற்கான அறிவும் அவசியம் என்பதை மையப்படுத்தி நிகழ்ச்சியின் பல்வேறு அமர்வுகள் அமைந்திருந்தன.
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயணத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் திரைக்கதை உருவாக்கம் தொடர்பான தனது அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வேன் அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தை வெளியிட்டார்.

அகாடமியின் தொடக்க நிகழ்வின் முக்கிய அம்சமாக, லோகேஷ் கனகராஜ் மற்றும் ஐபி கிளைம்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திரைக்கதை எழுத்து, படைப்புகளை உருவாக்கும் நடைமுறை மற்றும் எழுத்தாளர்களின் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நவீன கதைசொல்லலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் மாநாடு விரிவாக எடுத்துக்காட்டியது. பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி, புதிய தொழில்நுட்பங்கள் கதைசொல்லலில் ஏற்படுத்தி வரும் தாக்கம் மற்றும் நவீன கதை இயக்கவியல் குறித்து பேசினார்.
மேலும், 916 ஸ்டூடியோ சார்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், தற்போது வேகமாக வளர்ந்து வரும் வெர்ட்டிக்கல் ஷார்ட்-ஃபார்ம் டிராமா வடிவம் குறித்து கலந்துரையாடப்பட்டது. டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியால் உருவாகி வரும் புதிய கதைசொல்லல் வடிவங்கள் மற்றும் அவற்றில் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.
எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனுராஜ் மனோகர், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகளும் மாநாட்டில் சிறப்பு அமர்வுகளை நடத்தினர்.
திரைக்கதை எழுதும் நுட்பங்கள், நவீன கதைசொல்லல் முறைகள், டிஜிட்டல் காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
திரைக்கதை எழுத்தை வெறும் தனிப்பட்ட படைப்பாற்றல் முயற்சியாக மட்டுமின்றி, முறையான பயிற்சி மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் தேவைப்படும் துறையாக முன்னெடுக்கும் நோக்கில் ஸ்வேன் அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புகளுக்கான உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும் இத்தளம் வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் தலைமையில் செயல்பட்டு வரும் SWAN, தென்னிந்திய சினிமாவில் திரைக்கதை எழுத்துக்கான கல்வி மற்றும் பயிற்சி கட்டமைப்பை உருவாக்குவதிலும், எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஸ்வேன் அகாடமியின் தொடக்கம், தென்னிந்திய திரையுலகில் அடுத்த தலைமுறை திரைக்கதை எழுத்தாளர்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் படைப்புரிமை குறித்த புரிதலை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக அமைந்துள்ளது.

SWAN Academy Launched to Strengthen Screenwriting Education and Protect Writers’ Rights
Director Lokesh Kanagaraj unveils SWAN Academy logo and curriculum in Chennai
Chennai: In a significant initiative aimed at strengthening screenwriting education and creating greater awareness about writers’ rights, the South Indian Film Writers Association (SWAN), in association with IP Climb, has launched the SWAN Academy in Chennai.
To mark the launch, SWAN and IP Climb organised a special full-day writers’ conclave at the Anna Centenary Library, bringing together more than 300 aspiring screenwriters, storytellers and prominent personalities from the film industry.
SWAN President and filmmaker Cheran welcomed the gathering and spoke about the vision and objectives behind the newly launched academy. The initiative focuses on providing aspiring writers with structured training, professional guidance and a better understanding of intellectual property rights.
Filmmaker Lokesh Kanagaraj, who attended the event as the Chief Guest, shared insights from his own journey as a writer and filmmaker, along with his perspectives on developing stories and screenplays. He later unveiled the SWAN Academy logo and curriculum.
One of the highlights of the launch was an engaging fireside conversation featuring Lokesh Kanagaraj and G.K. Tirunavukkarasu, Chief Executive Officer of IP Climb. The discussion explored various aspects of screenwriting, the creative process and the importance of understanding and protecting intellectual property in the film industry.
The conclave also featured a series of sessions focusing on emerging trends in storytelling. Lyricist and writer Madan Karky spoke about evolving narrative dynamics and the influence of new technological approaches on contemporary storytelling.
A special session presented by 916 Studio focused on the rapidly emerging format of vertical short-form drama, examining the changing digital content landscape and the opportunities it presents for writers and storytellers.
The event also featured sessions by acclaimed writer-director Leena Manimekalai, Malayalam writer-director Anuraj Manohar, veteran writer S. Ramakrishnan and other leading creative professionals.
Discussions throughout the conclave covered a wide range of subjects, including screenwriting techniques, contemporary storytelling formats, new opportunities for writers in the digital era, and the importance of protecting intellectual property and creative rights.
The SWAN Academy has been conceived as a structured platform to help aspiring storytellers and screenwriters develop their craft while gaining professional knowledge about the industry. Along with creative training, the academy aims to create greater awareness among writers about ownership and protection of their original works.
SWAN, which operates under the leadership of veteran creators including Cheran, Pattukottai Prabhakar, R. Sundarrajan, Samuthirakani and Snehan, has reaffirmed its commitment to developing a structured ecosystem for screenwriting education and strengthening the protection of writers’ creative rights across South Indian cinema.
The launch of SWAN Academy marks a new step towards nurturing the next generation of screenwriters by bringing together creative training, industry mentorship and intellectual property awareness under one platform.
