திரைக்கதை எழுத்தாளர்களுக்கான புதிய பயிற்சித் தளம்: சென்னையில் ஸ்வேன் அகாடமி தொடக்கம்
திரைக்கதை எழுத்தாளர்களுக்கான புதிய பயிற்சித் தளம்: சென்னையில் ஸ்வேன் அகாடமி தொடக்கம்
லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் ஸ்வேன் அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டம்
சென்னை: தென்னிந்திய திரையுலகில் திரைக்கதை எழுத்தாளர்களுக்கான முறையான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN), ஐபி கிளைம்ப் நிறுவனத்துடன் இணைந்து ஸ்வேன் அகாடமியை தொடங்கியுள்ளது.
இதையொட்டி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு எழுத்தாளர்கள் மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரைக்கதை எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முன்னணி படைப்பாளிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஸ்வேன் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சேரன், ஸ்வேன் அகாடமியின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து...
