Wednesday, August 10
Shadow

Tag: அனிருத்தை அடக்க ஒரே வழி கல்யாணம் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி

அனிருத்தை அடக்க ஒரே வழி கல்யாணம்  தான் சூப்பர்ஸ்டார் ரஜினி

அனிருத்தை அடக்க ஒரே வழி கல்யாணம் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி

Latest News
வீட்டுக்கு அடங்குகிற பிள்ளைதான் அனிருத்! ஆனாலும் அவ்வப்போது கயிறை அறுத்துக் கொண்டு கண்டபடி மேய்வதால் ஊரெங்கும் ஒரே கெட்டப் பெயர். மைண்ட்டை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் என்று முதலில் கயிறை லூசில் விட்ட குடும்பத்திற்கு, அந்த சுதந்திரமே பெரிய அசவுகர்யம் ஆகிவிட்டது. அந்த அசவுகர்யத்தின் முதல் பிள்ளையார் சுழிதான் பீப் சாங். நல்லவேளை… அதிலிருந்து அனிருத்தை காப்பாற்றுவதற்குள் தலைவிரி கோலமாகிவிட்டார் அனிருத்தின் அப்பா ரவிச்சந்தர். மேற்படி விஷயத்தில் ரஜினியே கடுமை காட்டியதும் நடந்தது. அதற்கப்புறமாவது மைண்ட் ரிலாஸ்சேஷன் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தால் அனிருத் விஷயத்தில் அதுதான் நடக்கவில்லை. மீண்டும் சிம்புவுடன் நட்பு. தனுஷுடன் பகை, நேரங்கெட்ட நேரத்தில் ஊர் சுற்றுவது என்று வருகிற தகவல் எதுவும் வாய்க்கு ருசியாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்த ரவிச்சந்தர், ரஜினியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தின...