அரசியல் விமர்சன காமெடிகளுடன் வெளியானது தர்மபிரபு பட டீசர்
காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள 'தர்மபிரபு' படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. இவருடன் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்நிலையில் யோகிபாபு எமதர்மனாக நடித்திருக்கும், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=4A-_xRTHulc ...