Monday, August 8
Shadow

Tag: அரபிக்கடலின்

மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியை 16ம் நூற்றாண்டில் ஆண்ட சாமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் திரைக்கதை எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. அந்தமான் சிறைச்சாலையை மையமாக வைத்து மோகன்லால் - பிரபு நடிக்க பிரியதர்ஷன் இயக்கிய(தமிழில் சிறைச்சாலை) 'காலாபாணி' பெரும் வரவேற்பைப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பின் அதே கூட்டணியில் 90 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. சாமூத்திரிகள் ஆளும் கோழிக்கோடு நாட்டில் தந்தையை இழந்த முகமதலி குஞ்ஞாலி (மோகன்லால்), பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார். அந்த நாட்டை போர்ச்சுகீசியர்கள் ஆக்கிரமிக்க படையெடுக்கிற போது, கொள்ளைக்காரனான குஞ்ஞாலிக்கு கட...