“இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத் – விவேக்.
ஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு.... அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் 'ரம்' திரைப்படம்...'வி ஐ பி' புகழ் ஹ்ரிஷிகேஷ், 'சூது கவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ரம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2.11.2016 (புதன்கிழமை) அன்று சென்னையில் உள்ள 'ஹயாட்' ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.
பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவரான 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா,...
