
நீங்கள் புதிய தயாரிப்பாளரா? இது உங்களுக்கான எச்சரிக்கை….
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து பட தயாரிப்பாளர் ஒருவர் தனது அனுபவத்தை Cinema Pluz இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த அனுவ கதை திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருப்பதுடன், நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றியுள்ளது என்பதையும் விளக்குகிறது.
கடந்த நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ஒளடதம்" திரைப்படம், மீதான தடையை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியுள்ளது.
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "ஒளடதம்".
நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீத...