எம்சி ஜேஸ் மீண்டும் ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன்
வல்லவன் என்ற ஹிப்பாப் ஆல்பம் மூலமாக இளையராஜாவின் மடைதிறந்து என்ற பாடலை ஹிப்பாப் ஸ்டைலில் பாடி உலகத்திலுள்ள அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த எம்சி ஜேஸ் மீண்டும் ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன் என்ற ஆல்பத்தை தீபாவளி அன்று வெளியிட உள்ளார்.இவர்தான் முதன்முதலில் தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் சாங் முறையை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வருகைக்கு பிறகே தமிழ்சினிமாவில் ஹிப் ஹாப்பின் ஆதிக்கம் அதிகமானது.எனவே இவரின் ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன் ஆல்பத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இவர்களின் கவிதைகுண்டர் என்ற ஆல்பமும் தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குருவி படத்தில் ஹேப்பி நியூ இயர் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தொடர்ந்து லாடம்,உத்தமபுத்திரன்,ராஜபாட்டை,வெடி,கோ,சலீம்,எங்கேயும் காதல்,என்னை அறிந்தால்,10 எண்றதுக்குள்ள, இர...
