Thursday, February 12
Shadow

Tag: #ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'தளபதி 63' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள '99 சாங்ஸ்' படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் '99 சாங்ஸ்' படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளதாகவும். எல்லோரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ...
சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் 2.0 பட பிரபலங்கள் இருவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவிக்குமார் இயக்கும் இந்த படம் விஞ்ஞானி தொடர்பான கதையாக உருவாக இருக்கிறதாம். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்ப...
ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...