வாழ்க்கையில் தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வந்து தான் வெற்றியை அடைய முடியும் -கார்த்தி
தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , படத்தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன் , Forensic Officer தனஞ்ஜெயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் S.R. பிரபு பேசியதாவது இயக்குநர் வினோத் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இந்த ஒரு சப்ஜெட் மட்டும் தான் இருந்தது. அதிலிருந்து தான் மேம்படுத்தினோம். முதலில் இந்த கதை தான் ரொம்ப நம்பிக்கையான விஷியமா எங்களிடம் இருந்தது. இரண்டாவதாக வினோத் மீது நம்பிக்கை இருந்தது. அவர் தான் எடுத்து கொண்ட விஷியத்தில் தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதில் மிக தெளிவாக இருந்தார். தன் இரண்டாவது படத்திலே பெரிய படம் என்ற பதற்றம் இல்லாமல் இருந்தார். படம் எப்படி வர...
