Saturday, February 8
Shadow

Tag: கோடி

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…

Latest News, Top Highlights
சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதன...

கொரோனா தடுப்பு நடவடிக்கை; நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

Latest News, Top Highlights
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி வழங்கும்படி, பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.3 கோடி வழங்கி உள்ளார். அவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தினக்கூலிகள் மற்றும் அவர் பிறந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்....

கொரோனா நிவாரண உதவியா ₹1.25 கோடி வழங்கிய ‘தல’ அஜித்

Latest News, Top Highlights
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர். அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 ல...

திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்திற்கு நடிகர் அக்சய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி

Latest News, Top Highlights
நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளை மூலம், திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்திற்கு நடிகர் அக்சய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்துவரும் நடிகர் ராகவா லாரன்ஸ், அதன் அடுத்தகட்டமாக திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், லாரன்ஸ் இயக்கும், லக்சுமி பாம்ப் எனும் படத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், இத்திட்டத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். தமிழ்ப்படமான காஞ்சனாவின் இந்தி ரீமேக்காக உருவாகிவரும் லக்சுமி பாம் படத்தில் அக் ஷய்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது....