நடிகை சந்தியா பிறந்த தின பதிவு
சந்தியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.
சந்தியா எனப்படும் இந்த நடிகையின் இயற்பெயர் ரேவதி என்பதாகும். இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் 2004 இல் வெளியான காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இவர் தற்போது வரை காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய தகப்பனார் அஜித் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்தவர் மற்றும் தாயார் அழகுக்கலை நிபுணர் ஆவார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும். இவர் சென்னையில் வித்யோதய்யா பிரைமரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது காதல் திரைப்பட கதாநாயகியாக நடித்ததால், பின் பள்ளிப்படிப்பை நிறுத...
