சிம்பு மற்றும் அஜித் ரசிகர்கள் மோதல் எனக்கு என் ரசிகர்கள் போதும்- சிம்பு
நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது கோலிவுட்டில். எதையும் வெளிப்படையாக பேசுவது அவருக்கே எதிராக அமைந்துவிடுகிறது. இதற்காகத்தான் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியே வந்த சிம்பு, நேற்று முதல் பேஸ்புக் பக்கத்தில் இணைந்தார். நேற்று இணைந்ததுமே ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டார்.
நேற்று மாலை சிம்பு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், சிம்பு நடித்து வரும் படங்களில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு சிம்பு அளித்த பதில் அஜித் ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை வரவழைத்துள்ளது.
அதாவது சிம்பு, யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால், இனிமேல் என்னுடைய படங்களில் தல ப...