சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி..
ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”. நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.
” புலிமுருகன்” படம் பற்றி…
கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்கா...
