சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.
ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.
தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார்.
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம...