செல்ஃபி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக இந்த புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு முட்டல் மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி திரைப்படத்தின் ஒன் லைன்.
கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் புரோக்கர்களை பற்றிய கதையாக செல்ஃபி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை தன் முதுகில் சுமந்து செல்கிறார். அவரின் அலட்டிக்கொள்ளாத அசால்ட்...
