அசுரன் பட பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன்: ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு
அசுரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதையடுத்து அசுரன் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இணைந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும் , இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் கூறியுள்ளார்.
பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பழிவாங்கும் திரில்லர் கதையே ‘வெக்கை’ நாவல். நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றி மாறனுடன் இணைந்து பணியாற்றுவது இது நான்காவது முறையாகும். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், மஞ்சுவாரியர், பா...