தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக நதியா
பூவே பூச்சூடவா, உயிரே உனக்காக படங்கள் மூலம் தமிழில் பிரபல நாயகியானவர் நதியா. அதையடுத்து ஒரு பெரிய ரவுண்டு வந்த அவர், பிரபுவுடன் நடித்த ராஜகுமாரன் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு 1994இல் நடிப்புக்கு குட்பை சொன்னவர், பின்னர் 2004இல் எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து தாமிரபரணி, சண்ட உள்பட சில படங்களில் நடித்த நதியா, தற்போது தனுஷ் இயக்கும் பவர்பாண்டி படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கதைப்படி இந்த படத்தில் ராஜ்கிரணுக்கு மனைவியாக நதியா நடிக்கிறாராம். மேலும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என்ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்த மீனாவைதான் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாம்.
ஆனால், தற்போது மீனாவை விட நதியாவே மார்க்கெட்டில் இருப்பதால் அவர் ராஜ்கிரணுக்கு ஜோடியாகி விட்டாராம் தனுஷ். அதே...