திருட்டு DVD க்கு ஆப்பு வைக்கும் ரெமோ தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தான் தயாரித்து வரும் ‘ரொமோ’ படத்தின் திருட்டு டிவிடிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு செயல் திட்டத்தை கொண்டு வருகிறாராம்.
ஆமாம், 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகும் ரெமோ படத்தை முதலில் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்து விட்டு அதன் பிறகே வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.
” இது எங்கள் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கொள்கை. புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தவிர்ப்பதே முதல் நோக்கம். அதன்படி ரெமோ தமிழகத்தில் அக்டோபர் 7-ல் வெளியாகிறது. இங்கு முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னரே வெளிநாட்டில் வெளியாகிறது” என்று அறிவித்திருக்கிறார்.
ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்களை ஏற்கனவே வெளியான நிலையில் விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 7ம் தேதி ‘ரெமோ’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது....
