சாஹோ திரை விமர்சனம் Rank 3/5
பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சாஹோ. இதை தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள பிரபாஸ் எடுத்துள்ள முயற்சியே இந்த படம் சாஹோ. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டராக இருந்து வருபவர் ராய் (ஜாக்கி ஷெரப்). இந்தியாவில் கோடிக்கணக்கான பணத்துடன் தனது பணிகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் இவர், அந்த நேரத்தில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்படுகிறார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது. அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டி...



