
தேவி படத்தை பாராட்டிய தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ஊடகங்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாம், மூன்றாம் நாள் வசூல் அதிகரித்துள்ளதாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல் வந்துள்ள நிலையில் இந்த படத்தை பார்த்து நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் 'தேவி படம் பார்த்தேன். இயக்குனர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். பிரபுதேவா அவர்களின் நடிப்பு மற்றும் டான்ஸ் அபாரம். தமன்னாவின் நடிப்பு அற்புதம் என்று புகழ்ந்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் 'தேவி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இசையமைப்பாளர் G.V. பிரகஷ்குமாரும் வாழ்த்து தெரிவித்தார் இதுவரை விஜய் இயக்கத்தில் வந்த எல்லா...