பக்ரி திரை விமர்சனம்
நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்திருக்கும் திரைப்படம் ’த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’.
இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கும் இந்தப் படம், இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இன்று வெளியானது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
இந்த படத்தில் நடிகர் தனுஷ், அஜதாஷத்ரு லாவாஷ் படேல் என்ற தெருவில் மேஜிக் செய்யும் நபராக நடித்துள்ளார். இவரது மேஜிக்கை பார்க்கும் மக்களிடம், தனக்கு அதிக சக்தி இருப்பதாக நம்ப வைக்கும் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார்.
எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகீர் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை லூக் பாஸ்ஸி மற்றும் ஜான் கோல்ட்ம...
