இளையராஜாவுக்கு வைரமுத்துவின் கவிதை வாழ்த்து
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் கவிதை வாழ்த்து பின்வருமாறு..
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழு...
