பலூன்’படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடலை பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்
ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை...அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் - பாடகர் அருண்ராஜா காமராஜ்.... தற்போது இவர் இளைஞர்களை தன்னுடைய துள்ளலான இசையால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார். ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'பலூன்' திரைப்படத்தை '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பலூன் தி...
