விஷால்-வடிவேலு-சூரி-சுராஜ் கூட்டணியில் சிரிக்க வைக்கும் ‘கத்திச் சண்டை’
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதன் கூடவே ‘கத்திச் சண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, பாடல்கள் -நா.முத்துக்குமார், ‘ஹிப் ஹாப்’ தமிழா, எடிட்டிங் – ஆர்.கே.செல்வா, சண்டை பயிற்சி –கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ், கலை -உமேஷ்குமார், நடனம் -தினேஷ், ...
