Friday, February 7
Shadow

Tag: #ஸ்ரீ தேனாண்டாள் #பிலிம்ஸ்

சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

சந்தானம் படத்தை கைவிட்ட விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சந்தானம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சக்க போடு போடு ராஜா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘சர்வர் சுந்தரம்’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. சந்தானம் தற்போது 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ராஜேஷ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. சில காரணங்களால் சந்தானம் படத்தை தயாரிக்க இருந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிற...
தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன், நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. "முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவரால் நடிக்க முடியாததால், தெலுங்கில் மற்றொரு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிய...
ஆர்.கே.நகரை முடித்த வெங்கட்பிரபு கூட்டணி

ஆர்.கே.நகரை முடித்த வெங்கட்பிரபு கூட்டணி

Latest News, Top Highlights
வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ப...
மீண்டும் இயக்குநராகும் தனுஷ்

மீண்டும் இயக்குநராகும் தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தை முடித்த தனுஷ், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், `கொடி-2' படத்திலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறாக பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை தனஷே இயக்கி, நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், சமீபத்தில் ராஜ் கிரணை வைத்து ‘பா.பாண்டி’ படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத...
ஆர்.கே.நகரை கைப்பற்றிய விஜய் பட நிறுவனம்

ஆர்.கே.நகரை கைப்பற்றிய விஜய் பட நிறுவனம்

Latest News, Top Highlights
வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் சனா அல்தாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்.கே.நகர் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றிய இருக்கிறது. வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்ஙறு எதிர்பார்க்கப்படுக...