‘அசுரன்’ – திரை விமர்சனம் ( தமிழ் சினிமாவின் அரசன்) Rank 4/5
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள அசுரன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வடக்கூரானுக்கும் சிவசாமியான தனுசுக்கும் இடையிலான நிலத் தகராரில் தனுஷின் மூத்த மகன் முருகன் கொடூரமாக கொல்லப்படுகிறார். அண்ணுக்காக பழித்தீர்க்கும் தனுசின் இளையமகன் சிதம்பரம், வடக்கூரானை வெட்டிக் கொலை செய்கிறார். இதற்காக பழிவாங்கத் துடிக்கும் வடக்கூரா னின் ஆட்கள் சிவசாமி குடும்பத்தை வேரறுக்க தொடங்குவதே படத்தின் கதை.
இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி உள்ள வெற்றிமாறன், அ...

