
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள அசுரன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வடக்கூரானுக்கும் சிவசாமியான தனுசுக்கும் இடையிலான நிலத் தகராரில் தனுஷின் மூத்த மகன் முருகன் கொடூரமாக கொல்லப்படுகிறார். அண்ணுக்காக பழித்தீர்க்கும் தனுசின் இளையமகன் சிதம்பரம், வடக்கூரானை வெட்டிக் கொலை செய்கிறார். இதற்காக பழிவாங்கத் துடிக்கும் வடக்கூரா னின் ஆட்கள் சிவசாமி குடும்பத்தை வேரறுக்க தொடங்குவதே படத்தின் கதை.
இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி உள்ள வெற்றிமாறன், அக்காலத்தில் இருந்த சாதியக் கொடுமைகள்., உயர்ச் சாதியினரின் அராஜகப் போக்கு என எல்லாவற்றையும் துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார்,
ஊருக்குள் செருப்பு அணிந்து சென்ற தனுசின் அக்காவின் மகள் அவமானப்பட அங்கிருந்து கிளம்பிய பகையொன்றின் கிளைக்கதையை இரண்டாம் பகுதியை உருவாக்கப்பட்டுள்ளது.
வயதான அப்பா கதாபாத்திரத்தில் வரும் தனுஷின் உடல் மொழி அவ்வளவு திருப்தியாக இல்லை. ஆனால் ப்ளாஷ் பேக் காட்சியில் வரும் சிறுவயது தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
வெக்கை நாவலில் வடக்கூரானை சிதம்பரம் வெட்டும் காட்சி கடத்திய பதை பதைப்பை வேல்ராஜும் வெற்றிமாறனும் திரையில் காட்ட தவறிவிட்டனர். வெக்கை நாவலில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் சற்று குறைவாக உள்ள என்றாலும், வக்கீலாக வரும் பிரகாஷ்ராஜ், பட்டியலின மக்களுக்கான பிரச்னைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.
சண்டைக் காட்சியில் பீட்டர் ஹெயினின் அதிரடியும், ஜி.வி.பிரகாசும் இசையும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்தின் பலம்.
மோசமான போலீஸ் அதிகாரியாக வலம் வரும் பாலாஜி சக்திவேல் சிறப்பாக நடித்துள்ளார். தனுசின் இளையமகனாக வரும் கென் கோவில்பட்டி மக்களை உரிந்தது வைத்துள்ளார். துவக்கத்தில் ஒரு மணிநேரம் மெதுவாக செல்லும் திரைக்கதை வடக்கூரானை வெட்டியதும் விறுவிறுப்பாக மாறி விடுகிறது. ’ஆடுகளம்’ படத்தில் மதுரையின் மொழி தனுஷிற்கு வசப்பட்ட அளவிற்கு, இப்படத்தில் கோவில்பட்டியின் மொழி கைகூடவில்லை என்பது உண்மை தான்.
கிளைமேக்சில் “நம்மகிட்ட இருந்து நிலத்தை பறிக்கலாம், காச திருடலாம், ஆனா படிப்ப யாரும் திருட முடியாது நல்லா படிக்கனும்” என தனுஷ் பேசும் வசனம் தியேட்டரில் தனுஷ் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளுகிறது.
படத்தின் பிளஸ்: நடிகர் தனுஷ் நடிப்பு, சிறப்பான கதை களம், இசை, சண்டைகாட்சிகள்
படத்தின் மைன்ஸ்: தனுஷ் பேசும் கோவில்பட்டி மொழி சில இடங்களில் மிஸ்ஸிங்
மொத்தத்தில் ஆஸ்கர் விருது கொடுக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ள தனுஸின் நடிப்புக்காகவும், வெற்றிமாறன் சிறப்பான கதைகாக்கவும் கண்டிப்பாக ஒரு முறை இல்லை பல முறை பார்க்க வேண்டிய படம்.
மொத்தத்தில் அசுரன் தமிழ் சினிமாவின் அரசன் Rank 4/5
