அஜித் படம் “தல 57” பபடபிடிப்பு அனுமதி மறுப்பு
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவதால் தமிழ் திரையுலகில் சில படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அப்பல்லோ மருத்துவமனை அருகிலேயே மணி மஹால் என்ற படப்பிடிப்பு தளம் ஒன்று இருக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து படப்பிடிப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புக்காக 2 நாட்களுக்கு மணி மஹாலை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இதில் அஜித் இன்றி காஜல் அகர்வால் காட்சிகள் மட்டும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்...
