Thursday, November 13
Shadow

Tag: எஸ். ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர...