காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை“ தங்கரதம் “
என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “
எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். நீரஜா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சௌந்தர்ராஜன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா சாமிநாதன், பேபி தீபஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் டிஸ்கோ சாந்தியின் சகோதரி சுஜித்ரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இயக்குனர் பாலமுருகன் இவர்ஜெகனிடம் உதவி இய்யகுனராகவும், ராமன் தேடிய சீதை,புதியகீதை போன்ற படங்களில் இணை இயக்குனராகவும், கோடம்பாக்கம் படத்தில் இணை இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர்.அவர் இயக்கும் முதல் படம் இது
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறி ஏற்றிவரும் வேலை செய்யும் நாயகன் வெற்றிக்கும், அதே வேலை செய்யும் இன்னொரு கும்பலுக்கும் நடக்கும் தொழில் ப...
