அலாவுதீனின் அற்புத கேமரா பட கதை குறித்து இயக்குனர் விளக்கம்
அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனுக்கு சொன்ன கதையும் வேறு வேறு என்று மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.
மூடர் கூடம் படத்தின் புகழ் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இப்படத்தில், நவீன் உடன் இணைந்து கயல் ஆனந்தி நடித்துள்ளார். அதுவும், பிக்பாக்கெட் அடிக்கும் திருடியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில், உள்ள போது, ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் இப்படத்தை வெளியிட தடை கோரியுள்ளார். இவர், விசாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், வார இதழ் ஒன்றிற்கு நவீன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விசாகனுக்கு கதை சொல...

