கொரோனா நேரத்தில் உதவிய விஜய் டிவி-க்கு தொழிலாளர்கள் நன்றி…
கொரோனா நோயின் கோர தாண்டவ பிடியில் நாடே கதி கலங்கி இருக்கும் இந்த வேளையில் விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பி இருந்த சின்னத்திரையில் பணியாற்றும் அனைவருமே ஏப்ரல் மாதம் முழுவதும் வேலை செய்ய இயலாமல் போனது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏறக்குரைய 75 லட்ச ரூபாயை விஜய் டிவி உதவி தொகையாக வழங்கி இருக்கிறது தயாரிப்பு நிறுவன்ங்கள் மூலமாக ஒவ்வொரு தொடரிலும் வேலை செய்யும் பணியாளர்களின் கணக்கை எடுத்து மொத்த தொகையையும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி அவர்கள் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்த பணம் போய் சேர்ந்திருக்கிறதா என்பதையும் விஜய் டிவி உறுதி செய்துள்ளது.
விஜய் டிவிய்லி பல ஆண்டுகாலமாக தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வரும் குளோபல் வில்லேஜர்ஸ். இந்த பேருதவியை நினைத்து பெருமைப்படுகிறது. எங்கள் மனதில் நீங்கா மகிழ்ச்சியை இந்த நேரத்தில் அளித்த விஜய் டிவியின் பொது ம...
