ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”
திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் "நாகேஷ்திரையரங்கம்" எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கி சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இதில் கதாநாயகனாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள்.
முண்டாசுப்பட்டி, ராஜாமந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் பல முன்...
