V திரைப்படம் விமர்சனம் ( Rank 3.5/5)
கொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்திற்கு வந்துள்ளது, அதில் மிக முக்கியமான படம் நானியின் V, இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்ப்போம்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை நடக்க அதை விசாரிக்க டிசிபி ஆதித்யா வருகிறார், அங்கு ஆதித்யா தான் எனக்கு வேண்டும் என்று கொலைக்காரன் எழுதி வைத்துள்ளான்.
அதை தொடர்ந்து மேலும் 4 கொலைகள் செய்யவுள்ளேன், முடிந்தால் கண்டிப்பிடி என ஆதித்யாவிற்கு சவால் விடுகிறான்.
அதை தொடர்ந்து கிரேம் எழுத்தாளர் நிவேதா தாமஸ் உதவியுடன் விசாரணைகளை தொடங்க ஆரம்பிக்கின்றார் ஆதித்யா, அந்த சவால் விடுவது நானி என்று நமக்கு தெரிந்தாலும், நானியை, சுதீர்(ஆதித்யா) எப்படி பிடிப்பார் என்ற ஆடுபுலி ஆட்டமே இந்த வி.
நானியின் 25 வது படம் என்றாலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆ...

