வசந்த முல்லை திரை விமர்சனம் – (ரேட்டிங் 3/5)
பாபி சிம்ஹா, கஷ்மீரா பர்தேசி, ஆர்யா மற்றும் சிலர் நடித்துள்ள படம் “வசந்த முல்லை”. இப்படத்தை, ரமணன் புருஷோதமா இயக்கியிருக்கிறார். ரேஷ்மி சிம்ஹா இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஒரு ஐடி நிறுவனத்தில் பாபி சிம்ஹா புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார். இவரது கம்பெனிக்கு ஒரு மிகப்பெரிய புராஜெக்ட் வருகிறது. இதை குறைந்த நாட்களில் முடித்து தருமாறு கேட்கின்றனர். இதற்கான பொறுப்பை பாபி சிம்ஹா ஏற்றுக் கொண்டு வேலை செய்கிறார்.
குறைந்த நாட்களில் முடிக்க வேண்டிய வேலை என்பதால் பாபி சிம்ஹா தூக்கமே இல்லாமல் இதற்காக கடினமாக உழைக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த தூக்கமின்மை அவருக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து இவரை பரிசோதித்த மருத்துவர் கண்டிப்பாக ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
இதனால் காதலி கஷ்மீரா பர்தேசி, பாபி சிம்ஹாவை வற்புறுத்தி வெளியூர் அழைத்து செல்கிறார். அங்கு ...




