ஜெயில் திரை விமர்சனம் (Rank 3.5/5)
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த உட்பட க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிவி பிரகாஷின் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
சென்னையில் பூர்வ குடிமக்களை சென்னைக்கு வெளியே அரசு குடியமர்த்துகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் குறித்தும் பேசும் படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. குறித்தும் ஜிவி பிரகாஷ் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஞ்சா விற்பனை செய்யும் இரு குழு...




